"எந்த கொரோனா அலையையும் தாங்கும் வல்லமை தமிழ்நாடு அரசுக்கு உண்டு " - முதலமைச்சர் ஸ்டாலின்

"எந்த கொரோனா அலையையும் தாங்கும் வல்லமை தமிழ்நாடு அரசுக்கு உண்டு " - முதலமைச்சர் ஸ்டாலின்
"எந்த கொரோனா அலையையும் தாங்கும் வல்லமை தமிழ்நாடு அரசுக்கு உண்டு " - முதலமைச்சர் ஸ்டாலின்
Published on

"எந்த கொரோனா அலையையும் தாங்கும் வல்லமை தமிழ்நாடு அரசுக்கு உண்டு" என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், "தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் ஏராளமான படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் தீவிர சிகிச்சைப்பிரிவு படுக்கைகளும் ஏராளமாக உள்ளன. எந்த அலையையும் தாங்கும் வல்லமை அரசுக்கு உள்ளது. தமிழ்நாடு மக்களுக்கும் அந்த நம்பிக்கை உள்ளது என அறிவேன். நான் நாட்டுமக்களிடம் சொல்லவிரும்புவது ஒன்றுதான். கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம் என சொல்லலாமே தவிர முழுமையாக ஒழித்துவிட்டோம் என்று சொல்லமுடியாது.

எனவே விதிமுறைகளை கடைபிடிப்பதில் மக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், விதிமுறைகளை பின்பற்றத் தேவையில்லை என நினைக்கக்கூடாது. இன்னும் பள்ளி, கல்லூரிகள் உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்கள் திறக்கப்படவில்லை. இதற்கான காரணம் ஏன் என்பதை உணர்ந்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு முழுமையாக இன்னும் தடுப்பூசி போடவில்லை. ஒன்றிய அரசு கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக வழங்கவில்லை. முழுமையான அளவுக்கு தடுப்பூசி கிடைக்காததால் மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மக்கள் அனைவரும் தங்களுக்கு தாங்களே சுயக்கட்டுப்பாட்டை விதித்துக்கொள்ள வேண்டும்’’ என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com