“பக்தியை பகல் வேஷமாக பயன்படுத்துபவர்களால் எங்கள் செயல்களை தாங்க முடியவில்லை”- முதல்வர் மு.க.ஸ்டாலின்

“நாடாளுமன்றத் தொகுதிகள் குறையும் என்ற நிலை வரும்போது, ஏன் அளவோடு குழந்தை பெற்று வளமோடு வாழவேண்டும்... நாமும் பதினாறு குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம் என்ற குரல் எழுந்துள்ளது. ஆனால்...” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
முதல்வர் முக.ஸ்டாலின்
முதல்வர் முக.ஸ்டாலின்புதிய தலைமுறை
Published on

செய்தியாளர்: சந்தான குமார்

சென்னை திருவான்மையூரில் உள்ள மருதீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று திருமணம் நடத்தி வைத்தார்.

முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமை ஏற்று திருமணம் நடத்தி வைத்தார்
முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமை ஏற்று திருமணம் நடத்தி வைத்தார்pt desk

இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 2024 - 25 ஆம் ஆண்டு 700 இணைகளுக்கு தமிழக திருக்கோயில்கள் மூலம் திருமணம் நடத்தி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் இன்று தமிழக முழுவதும் 379 இணைகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருமணம் நடைபெற்றது. திருக்கோவில் சார்பில் 4 கிராம் தங்கத்தாலி, கட்டில், மெத்தை, பீரோ உள்ளிட்ட 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.

முதல்வர் முக.ஸ்டாலின்
திருச்சி: கடவுள் உங்கள் வீட்டிற்கு வந்து தங்க வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள் - நடிகர் தம்பி ராமையா

இதைத் தொடர்ந்து மேடையில் மணமக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தி பேசியபோது...

“நான் முதலமைச்சராக பதவி ஏற்றபின் இந்து சமய அறநிலையத்துறை நிகழ்ச்சியில்தான் அதிகம் கலந்து கொண்டுள்ளேன். 31 இணைகளுக்கு இன்று திருமணம் நடத்தி வைத்து வாழ்த்துகள் தெரிவித்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் 2,221 திருக்கோயில்களின் திருப்பணிகள் நிறைவுபெற்று குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமை ஏற்று திருமணம் நடத்தி வைத்தார்
முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமை ஏற்று திருமணம் நடத்தி வைத்தார்

“திருக்கோயில்களுக்குச் சொந்தமான 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது”

நன்கொடையாளர்கள் மூலம் பெறப்பட்ட 1,300 கோடி ரூபாயில் 9 ஆயிரத்திற்கு மேற்பட்ட கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. திருக்கோயில்களுக்குச் சொந்தமான 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட நிலங்களின் மதிப்பு 6 ஆயிரம் கோடிக்கு மேலாகும். ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்களை பாதுகாப்பது முக்கிய நோக்கம் என்ற கொள்கையோடு செயல்பட்டு வருகிறோம். திருக்கோயில்களின் வங்கி கணக்கில் 2 லட்சம் ரூபாய் செலுத்தி அதில் வரும் வட்டிப் பணத்தில் கோயில்களுக்கு தேவையான திருப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

முதல்வர் முக.ஸ்டாலின்
சுவாமிமலையில் பக்தர்கள் மீது தண்ணீர் அடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு: அமைச்சர் சேகர்பாபு கொடுத்த பதில்

“தமிழில் அர்ச்சனை செய்வதற்கு நீதிமன்றத்தில் தீர்ப்பை பெற்றுள்ளோம்”

17 ஆயிரம் கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் ஒன்பது கோயில்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அறநிலையத் துறையின் முக்கியமான செயல்பாடு கோயில் தொடர்பான வழக்குகளை கையாண்டு, தமிழில் குடமுழுக்கு செய்வதற்கு நீதிமன்றத்திடம் தீர்ப்பை பெற்றுள்ளோம். கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதற்கும் நீதிமன்றத்தில் தீர்ப்பை பெற்றுள்ளோம்.

முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமை ஏற்று திருமணம் நடத்தி வைத்தார்
முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமை ஏற்று திருமணம் நடத்தி வைத்தார்

“எல்லோரின் உரிமையையும் காக்கும் அரசாக திராவிட மாடல் அரசு விளங்குகிறது”

சிதம்பரம் கனகசபை மீது ஏறி பொதுமக்கள் வழிபாடு செய்வதற்கு நீதிமன்ற தீர்ப்பை பெற்றுள்ளோம். பக்தர்கள் தலைநிமிர்ந்து வழிபாடு செய்து வருகின்றனர். இந்து சமய அறநிலைத் துறையின் செயல்பாடுகளை உண்மையான பக்தர்கள் பாராட்டுகின்றனர். பக்தியை பகல் வேஷமாக பயன்படுத்துபவர்களால் இதனை தாங்க முடியவில்லை. எல்லோரின் உரிமையையும் காக்கும் அரசாக திராவிட மாடல் அரசு விளங்குகிறது. 'கொடியவர்களின் கூடாரமாக கோயில் மாறிவிடக் கூடாது' (பராசக்தி பட வசனம்)” என்றார்.

முதல்வர் முக.ஸ்டாலின்
நெல்லை | "திமுக கூட்டணி விரைவில் உடைந்துவிடும்" - எடப்பாடி பழனிசாமி!

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க:

தொடர்ந்து பேசிய அவர், “முன்பெல்லாம் திருமணத்திற்கு வாழ்த்து சொல்லும் போது பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்தினார்கள். அந்த 16 என்பது குழந்தைகளை குறிக்காது; செல்வங்களை குறிக்கும்” என்று கூறிய முதல்வர், 16 செல்வங்களையும் அடுக்கு மொழியில் பேசியதோடு, “தற்போது அளவோடு பெற்று வளமோடு வாழ்க என்றே வாழ்த்துகிறார்கள்” என்றார்.

குழந்தைகளுக்கு அழகிய தமிழ் பெயரை சூட்டுங்கள்:

மேலும் “நாடாளுமன்றத் தொகுதிகள் குறையும் என்ற நிலை வரும்போது, ஏன் அளவோடு பெற்று வளமோடு வாழவேண்டும்? நாமும் பதினாறு குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம் என்ற சில குரல்கள் எழுந்துள்ளது. இந்த நேரத்தில் மணமக்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள் ஒன்றுதான்... குழந்தைகளுக்கு அழகிய தமிழ் பெயரை சூட்டுங்கள்” என்று முதல்வர் முக.ஸ்டாலின் வாழத்திப் பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com