''மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்'' - கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு முதல்வர் பாராட்டு

''மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்'' - கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு முதல்வர் பாராட்டு
''மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்'' - கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு முதல்வர் பாராட்டு
Published on

தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழ்நாடு காவல்துறையினருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

ஒசூர் முத்தூட் நிதி நிறுவனத்தில் 25 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று மதியம் கொள்ளை நடைபெற்றது. உடனடியாக சிசிடிவி மூலம் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கினர். முதல்கட்டமாக, நகைகளைக் கொள்ளையடித்து எடுத்துச்சென்ற பைகளில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டிருந்ததாக போலீஸாருக்கு தகவல் வந்தது. ஜிபிஎஸ் கருவிகளை வைத்து குற்றவாளிகளை பின்தொடர்ந்து தேடிவந்தனர்.

கர்நாடக மாநிலம் ஆனைக்கல் என்ற பகுதியில் ஜிபிஎஸ் கருவிகள் இருப்பது கண்டறியப்பட்டு நேற்று இரவுமுதல் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே அவர்களுடைய செல்போன் எண்களை வைத்து சிக்னலை ஆராய்ந்தபோது, கர்நாடகாவிலிருந்து சந்தேகத்திற்குரிய சில நபர்கள் பைகளை வைத்துக்கொண்டு ஹைதராபாத் சென்றது தெரியவந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் எஸ்.பி சக்திவேல் தலைமையிலான குழு அவர்களை பின்தொடர்ந்து ஹைதராபாத்தில் 6 பேரை கைது செய்தனர். கொள்ளை நடைபெற்று 18 மணி நேரத்தில் கொள்ளையர்களை கைது செய்த போலீசாருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமியும் தமிழ்நாடு காவல்துறையினருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அவருடைய ட்விட்டர் பதிவில், ''தமிழ்நாடு காவல்துறையினரின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கி வரும் முத்தூட் நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற கொள்ளையில் திருடு போன 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ தங்கத்தையும், கொள்ளையர்களையும் துரிதமாக செயல்பட்டு,

18 மணி நேரத்தில் பிடித்த தமிழ்நாடு காவல்துறையினருக்கு, குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறைக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com