நீலகிரி மாவட்டத்திற்கு உடனடி நிவாரணத்திற்காக ரூ30 கோடி ஒதுக்கீடு செய்ய முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரியில் கனமழையால் முழுமையாக சேதமடைந்த 296 குடிசைகளுக்கு தலா ரூ5000 வழங்கவும், பகுதியாக சேதமடைந்த 1,225 குடிசைகளுக்கு தலா ரூ4,100 வழங்கவும் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதேபோல், முற்றிலும் சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு மாற்றாக பசுகை வீடுகள் திட்டத்தில் புதிய வீடுகள் கட்டித் தர முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
சேதமடைந்த உட்கட்டமைப்புகளை நிரந்தமாக சீரமைக்க நிதி தொடர்பான முன்மொழிவுகளை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க சம்பந்தப்பட்ட துறைக்கு எடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.