இ.ஐ.ஏ எனப்படும் சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கையின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்றார். தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது மக்கள் தான் என்றும், மு.க.ஸ்டாலின் அல்ல என்றும் குறிப்பிட்டார்.
இதேபோன்று சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழு தரும் அறிக்கையின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொண்டார்.
அத்துடன் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு தலா ரூ.5000 வழங்கப்படும் எனவும், அவசரகால மருத்துவ பணியாளர்களுக்கு தலா ரூ.5,000 நிவாரண உதவி வழங்கப்படும் என அறிவித்தார்.