தமிழக மாணவர்கள் நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் கையேடு வெளியிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் தொடக்க விழா சென்னை உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் பழனிச்சாமி, எடப்பாடி, கோபிச்செட்டிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 25 மையங்களை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களை பயிற்றுவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் 412 பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு தயார்படுத்தும் வகையில் 54,000 கேள்வி, பதில்கள் கொண்ட கையேடும் வெளியிடப்பட்டுள்ளதாக கூறினார். தமிழகத்தின் பாடத்திட்டம் இந்தியாவிலுள்ள மற்ற மாநில பாடத்திட்டங்களை விட சிறந்தது என கூறிய முதலமைச்சர், போதிய பயிற்சி பெற்றாலே தமிழக மாணவர்கள் அனைத்துப் போட்டித்தேர்வுகளிலும் எளிதில் வெற்றிபெறுவார்கள் எனவும் தெரிவித்தார்.