நீரை சேகரிக்க ரூ.1000 கோடியில் தடுப்பணைகள் கட்டப்படும்: முதலமைச்சர் பழனிசாமி

நீரை சேகரிக்க ரூ.1000 கோடியில் தடுப்பணைகள் கட்டப்படும்: முதலமைச்சர் பழனிசாமி
நீரை சேகரிக்க ரூ.1000 கோடியில் தடுப்பணைகள் கட்டப்படும்: முதலமைச்சர் பழனிசாமி
Published on

ஓடைகள், ஆறு‌கள் குறுக்கே ரூ.1000 கோடியில் தடுப்பணை கட்டப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்‌. 

சென்னையில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ‌ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். வடசென்னையில் உள்ள ராயபுரம், மிண்ட் ஆகிய இடங்களில் நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் பழனிசாமி, ஆர்.கே நகரில் மழை‌வெள்ளத்தால் பாதிக்கப்‌பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அத்துடன் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி உதவிகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

பின்னர் பெருங்களத்தூரில் மழையால் பாதிக்கப்பட்டு முகாமில் தங்கியிருந்தவர்களை சந்தித்து நிவாரணப்பொருட்களை அவர் வழங்‌கினார். அத்துடன் பள்ளிக்கரணையில் உள்ள நாராயணபுரம் ஏரியை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஆய்வு செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், பெங்களுரூ போன்ற நகரங்களை விட சென்னையில் அதிவேகமாக மீட்புப்பணிகள் செய்யப்பட்டுவருவதாக கூறினார். ஆறுகள், ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளதாகவும், பாப்பாங்கால் ஓடை தூர்வாரப்பட்டுள்ளதால் இரண்டாயிரம் கன அடி தண்ணீர்‌ வடிந்து வெளியேறி வருவதா‌கவும் அவர் குறிப்பிட்டார். மேலும் நீரை சேமிப்பதற்காக ஓடைகள், ஆறுகளின் குறுக்கே ரூ.1000 கோடி செலவில் தடுப்பணைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com