புதிய 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு விரைவில் அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் பழனிசாமி

புதிய 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு விரைவில் அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் பழனிசாமி
புதிய 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு விரைவில் அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் பழனிசாமி
Published on

தமிழகத்திற்கு புதிதாக அறிவிக்கப்பட்ட 9 மருத்துவ கல்லூரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடுத்த மாதம் அடிக்கல் நாட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக மருத்துவக் கல்லூரி தொடங்க தமிழக அரசு மத்திய அரசுக்கு விண்ணப்பம் செய்திருந்தது. இதனையடுத்து தமிழக அரசு கேட்டிருந்த 9 மருத்துவக் கல்லூரிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்த நிலையில் மார்ச் மாதம் ஒன்றாம் தேதி இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்.

மார்ச் 4 ஆம் தேதி கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரிக்கும் 5-ம்தேதி நாமக்கல் மருத்துவக் கல்லூரிக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மார்ச் 5ம் தேதி கரூர் மற்றும் திண்டுக்கல் மருத்துவ கல்லூரிக்கும், 7-ம்தேதி நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரிக்கும், 8ம் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கும், 14-ஆம் தேதி திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டுகிறார். இதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com