’’நான் நிச்சயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன்’’ - முதல்வர் பழனிசாமி

’’நான் நிச்சயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன்’’ - முதல்வர் பழனிசாமி
’’நான் நிச்சயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன்’’ - முதல்வர் பழனிசாமி
Published on

"நம் உயிரைக் காப்பாற்றும் மருத்துவர்களே இந்த கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளும்போது, நான் நிச்சயமாகப் போட்டுக்கொள்வேன்" என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி பணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

அதன்பிறகு பேசிய அவர், ‘’தமிழகத்தைப் பொறுத்தவரை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்குத்தான் முதலில் தடுப்பூசி போடப்படும். முதல் டோஸ் போடப்பட்டு பிறகு 28 நாட்கள் கழித்து இரண்டாவது டோஸ் போடப்படும். அதற்குபிறகு அவர்கள் பாதுகாப்பாக இருப்பர். பிரதமர் மோடியின் முயற்சியால் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது பிரதமரின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி.

ஏற்கெனவே முதல்கட்டமாக தமிழகத்தில் 226 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது. இப்போது 166 இடங்களில் அது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதை வரலாற்று சிறப்பாக நாம் பார்க்கிறோம்.

இது உயிர் சம்மந்தப்பட்ட பிரச்னை. நம் குடும்பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான், இதை இந்தியா சம்மந்தப்பட்ட பிரச்னையாக பார்க்கவேண்டும்.

முன்கள பணியாளர்களுக்குப் பிறகு, நான், நீங்கள் மற்றும் என் குடும்பம் மற்றும் உங்கள் குடும்பமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும். நம் உயிரைக் காப்பாற்றும் மருத்துவர்களே இந்த கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளும்போது, நான் நிச்சயமாகப் போட்டுக்கொள்வேன்’’ என்று பேசியதுடன், இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்று ஊடகத்தினருக்கு கோரிக்கை வைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com