நியமன எம்.எல்.ஏ.க்கள் மூலம் ஆட்சிக்கவிழ்ப்பு செய்த எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி சட்டபேரவையில் முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இதில் பெரும்பான்மையை காங்கிரஸ் அரசு இழந்தது என்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது என்றும் சபாநாயகர் அறிவித்தார். இதனையடுத்து புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. இதனையடுத்து ராஜினாமா கடிதத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனிடம் கொடுத்த நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறும் போது, "ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனிடம் கேட்டுக்கொண்டோம். முடிவு செய்ய வேண்டியது ஆளுநர்தான். நியமன எம்.எல்.ஏ.க்கள் மூலம் ஆட்சிக்கவிழ்ப்பு செய்த எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள்.என்.ஆர். காங்கிரஸ், அதிமுக, பாஜகவுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள்." என்றார்.