திமுக ஆட்சியில் கல்வி மற்றும் மருத்துவம் ஆகிய துறைகள் முன்னேற்றமடைந்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் இரண்டு பத்திரிகை செய்திகளை சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ள அவர், “நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 3,300 அரசுப் பள்ளி மாணவர்கள் CLAT தேர்வு எழுதுவதற்கான விண்ணப்ப கட்டணத்தை அரசே செலுத்தி, அவர்களுக்கான இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதேப் போன்று, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தால் பயனைடைந்தவர்களில் 50 விழுக்காட்டினர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். இது கல்வி மற்றும் மருத்துவத் துறைகளின் சாதனைகளுக்கான சான்று மட்டுமல்ல; வெற்றிக்கான மணிமகுடம்” என பெருமிதம் தெரிவித்துள்ளார்