“எல்லாம் அவர் கைகளில்தான் உள்ளது” - பிரதமரைச் சந்தித்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

“பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சியான சந்திப்பாக அமைந்தது. இந்த மகிழ்ச்சியான சந்திப்பை பயனுள்ள சந்திப்பாக மாற்றுவது பிரதமரது கைகளில்தான் உள்ளது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
PMModi 
MKStalin
PMModi MKStalinpt web
Published on

முதலமைச்சரின் டெல்லி பயணம்

டெல்லிக்கு இரண்டு நாள்கள் அரசு முறை பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது கட்டாயக் கல்வித் திட்டத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை, மெட்ரோ 2 ஆம் கட்டத் திட்டப் பணிகளுக்கான நிதி உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.

PMModi
MKStalin
PMModi MKStalin

பிரதமர் உடனான சந்திப்புக்குப் பின் முதலமைச்சர் முக ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடியைச் சந்திப்பதற்காக டெல்லி வந்தேன். இன்று காலை பிரதமரைச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறோம். இந்த சந்திப்பு இனிய சந்திப்பாக அமைந்தது. பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சியான சந்திப்பாக அமைந்தது. இந்த மகிழ்ச்சியான சந்திப்பை பயனுள்ள சந்திப்பாக மாற்றுவது பிரதமரது கைகளில்தான் உள்ளது.

PMModi 
MKStalin
நாமக்கல்: கன்டெய்னர் லாரியில் ரூ. 66 லட்சம்... ATM கொள்ளை பணமா? ஒருவர் என்கவுன்ட்டர்; 5 பேர் கைது!

மூன்று கோரிக்கைகள்

1) ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என மூன்று முக்கிய கோரிக்கைகளை வைத்துள்ளேன். முதலில், சென்னை மெட்ரோ திட்டத்தை முதற்கட்ட பணிகளை ஒன்றிய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படுத்தியதுபோல், இரண்டாம் கட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்பது தமிழ்நாட்டின் நிலைப்பாடு. இரண்டாம் கட்ட பணிகளை காலதாமதம் இன்றி மேற்கொள்ள, 2019 ஆம் ஆண்டு மாநில அரசின் நிதியில் இருந்து மேற்கொள்ள, கடன்பெற்றும் பணிகளைத் துவக்கி, பின் ஒன்றிய அரசுடன் இணைந்து செயல்பட ஒப்புதல் பெறப்பட்டு உறுதி செய்யப்பட்டது. ஒன்றிய அமைச்சர் இதை ஏற்றுக்கொண்ட நிலையில் 2020 ஆம் ஆண்டு பணிகள் துவங்கப்பட்டது. நிதியமைச்சரும் இதற்கான நிதி ஒதுக்கப்படும் என அறிவித்தார். இந்த பணிகளுக்கு இதுவரை ரூ. 18,524 கோடிகள் செலவிடப்பட்டிருந்தாலும், இதுவரை ஒன்றிய அமைச்சரின் ஒப்புதல் வழங்கப்படாத நிலையில், ஒன்றிய அரசின் ஒப்புதலும் வழங்கப்படவில்லை. எனவே, தாமதமின்றி நிதியை ஒதுக்க வேண்டும் என தெரிவித்துள்ளேன்.

PMModi 
MKStalin
PMModi MKStalin

2) இரண்டாவதாக தமிழ்நாடு அரசு 40 விழுக்காடு நிதியையும், மத்திய அரசு 60% நிதியையும் அளித்து செயல்படுத்தக்கூடிய, ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தில், இந்த ஆண்டு ஒன்றிய அரசு வழங்கவேண்டியது ரூ. 2152 கோடி ரூபாய். இதில் முதல் தவணை தமிழ்நாட்டுக்கு வழங்கப்படவில்லை. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திடாததே இதற்கு காரணம் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் நல்ல கூறுகளையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தியுள்ளது. ஆனால், மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஒத்துக்கொள்ளவில்லை. மொழித்திணிப்பு இருக்காது என தேசிய கல்விக் கொள்கை உறுதி அளித்தாலும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அதற்கான ஷரத்து இல்லை. எனவே திருத்தப்பட வேண்டும் என கேட்டுள்ளோம். ஒன்றிய அரசு நிதியை விடுவிக்காத சூழலில் ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலையும், மாணவர்களது கல்வி பாதிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளோம்.

PMModi 
MKStalin
அமெரிக்கப் பெண் எடுத்த விபரீத முடிவு; விவாதமான சர்கோ பாட் பெட்டி!

தொடர்கதையாகும் மீனவர்கள் பிரச்னை

3) மூன்றாவதாக தமிழ்நாட்டு மீனவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை எடுத்துச் சொல்லியுள்ளோம். நமது பாரம்பரிய பகுதிகளில் மீன் பிடிக்கும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது நடந்து வருகிறது. இதுதொடர்பாக பிரதமருக்கு பல முறை கடிதம் எழுதியும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக அதிகளவில் நடந்து வருகிறது. 191 மீன்பிடிப் படகுகள், 145 மீனவர்கள் தற்போது இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக ஒன்றிய அரசு இலங்கை அரசை வலியுறுத்தி மீன்பிடிப் படகுகளையும் மீனவர்களையும் மீட்க வேண்டும் என கேட்டுள்ளேன். அடுத்தமாதம் கொழும்புவில் நடக்க இருக்கும் இந்தியா இலங்கை இடையிலான கூட்டுக்குழு கூட்டத்தில், இதுதொடர்பாக விவாதித்து தீர்வு காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளேன்.

பிரதமர் மோடி மூன்று கோரிக்கைகளையும் கலந்தாலோசித்து முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளார்” என்றார்.

PMModi 
MKStalin
கோயில் தொடர்பான கட்டடம்.. இடிக்க வந்த அதிகாரிகள்.. தேர் மண்டபத்திற்கு முன் சாமியாடிய பெண்கள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com