உருக்குலைத்த மிக்ஜாம் புயல்.. பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் என்ன?

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக மத்திய அரசு 5,060 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மிக்ஜாம் புயலால் பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சாலைகள், பாலங்கள், பொது கட்டடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதால் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இடைக்கால நிவாரணமாக 5,060 கோடி ரூபாயை உடனடியாக வழங்கிடுமாறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அசோக்நகர்
அசோக்நகர்pt web

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட சேதங்களை கணக்கிடும்பணி நடைபெற்று வருவதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், விரிவான சேத அறிக்கை தயாரிக்கப்பட்டு கூடுதல் நிதி கேட்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். சேதமடைந்த பகுதிகளை பார்வையிட மத்தியக்குழுவை தமிழகத்திற்கு அனுப்பவும் முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com