பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
Published on

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையிலுள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிதாக பொறுப்பேற்றுள்ள சட்டத்துறை அமைச்சர் ரகுபதியுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

ஏற்கெனவே இது தொடர்பான பல வழக்குகள் உச்ச நீதிமன்றம் மற்றும் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன. இதுகுறித்து தமிழக அரசு ஒரு நிலைப்பாட்டை எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் இறுதியாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் வீட்டில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழக தலைமை அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஏற்கெனவே வைகோ, திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இதுகுறித்து முதல்வரிடம் வலியுறுத்தியிருந்த நிலையில், தற்போது இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com