சிவாஜி சிலை திறப்பில் முதல்வர் பங்கேற்க காங்கிரஸ், திமுக வ‌லியுறுத்தல்

சிவாஜி சிலை திறப்பில் முதல்வர் பங்கேற்க காங்கிரஸ், திமுக வ‌லியுறுத்தல்
சிவாஜி சிலை திறப்பில் முதல்வர் பங்கேற்க காங்கிரஸ், திமுக வ‌லியுறுத்தல்
Published on

நடிகர் திலகம் சிவா‌ஜி கணேசனின் மணிமண்டப திறப்புவிழாவை அவருக்கு பெருமையும் புகழும் சேர்க்கும் விதத்தில் சிறப்பாக நடத்திட வேண்டும் என காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் சிவாஜி கணேசன் செவாலியே விருது பெற்றபோது அன்றைய முதலமைச்சர் ‌ஜெயலலிதா சிறப்பா‌ன விழா‌வை ந‌டத்தியதை சுட்டிக்காட்டியுள்ளார். சிவாஜி கணேசனின் சிலை மற்றும் நினைவு மணிமண்டப திறப்பு விழாவை, பெயருக்கு நடத்தாமல் சிவாஜி கணேசனுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசு நடிகர் சங்கத்துடன் இணைந்து தமிழக முதலமைச்சர், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்‌ஹாசன், நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் சிவாஜி கணேசன் குடும்பத்தினர் உட்‌பட அனைவரையும் அழைத்து விழா‌வை நடத்தவேண்டும் என‌ கேட்டுக்கொண்டுள்ளார்.

சிவாஜி கணேசன் சிலையை முதலமைச்சர் திறந்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை திமுகவின் கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவைத் தலைவர் வாகை சந்திரசேகரும் வலியுறுத்தியுள்ளார். சிவாஜி கணேசனின் சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தால் மட்டுமே விழாவிற்கு வருவோம் என திரையுலக நட்சத்தி‌ரங்கள் அறிவிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இன்றைக்கு சிவாஜி கணேசனுக்கு ஏற்பட்டுள்ள அவமரியாதை நாளை எந்தவொரு திரையுலகத்தினருக்கும் ஏற்படலாம் என்பதால் ஒட்டுமொத்த தமிழக திரையுலகமும் சிவாஜி கணேசனுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக திரண்டெழ வேண்டும் என வாகை சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயகுமார், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் திறப்பு விழா தினத்தன்று முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் வெளியூரில் இருப்பார்கள் என்பதால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com