இரண்டாவது தலைநகர் என்பது அவரவர் கருத்து, அரசின் கருத்தல்ல என்று முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.
தருமபுரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “4408 சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு 81.64 கோடி மதிப்பில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ஹெச்சிஎல் பெட்ரோல் கிடங்கு அமைக்க நிலம் எடுக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் நீர்திட்டம் ஆய்வில் இருந்து வருகிறது” என்றார்.
அத்துடன், “இரண்டாவது தலைநகர் என்பது அவரவர் கருத்து, அரசின் கருத்து இல்லை. கோவை மாநகராட்சி பள்ளி விண்ணப்பத்தில் இந்தி மூன்றாவது மொழியாக வந்த விண்ணப்பம் போலியானது. அதன் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாடகர் எஸ்பிபி உடல் நிலை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் கேட்டறிந்துள்ளார். அவரது உடல் நிலை குணமடைய நானும் இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்றார்.