தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டியில் இருந்து வைகை அணைக்கு விநாயகர் சிலை ஊர்வலங்கள் புறப்பட்டன. சிலைகளை கரைக்க முதலில் இந்து முன்னணி அமைப்பினருக்கு காவல்துறையினர் அனுமதி அளித்திருந்தனர்.
ஆனால், அவர்கள் செல்வதற்கு தாமதம் ஆனதால், பின்னால் வந்த இந்து மக்கள் கட்சியினர் முன்னேறி வந்து சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பதிலுக்கு இந்து முன்னணியினர், தாங்கள் தான் முதலில் செல்ல வேண்டும் எனக் கூறி காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்தனர். அப்போது இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால், குமுளி - மதுரை நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருதரப்பையும் சமாதானப்படுத்திய காவல்துறையினர், முதலில் இந்து முன்னணியினரையும், பின்னர் இந்து மக்கள் கட்சியினரையும் அனுப்பி வைத்தனர்.