பெண் வழக்கறிஞர்களுக்கான அறைக்கு சீல் வைத்த விவகாரம்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி புது ஆணை!

பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் விவேகானந்தா மூலம் வழக்கு தொடுக்கப்பட்டது
Supreme court
Supreme courtpt desk
Published on

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள காக்காத்தோப்பு பகுதியில் 4 ஏக்கர் பரப்பளவில் 37.07 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடங்களை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி 2.6.2022 அன்று திறந்து வைத்தார்.

இந்நிலையில் பெண் வழக்கறிஞர்களுக்காக கழிப்பறையுடன் கூடிய தனி அறை வேண்டும் என்று பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வைக்கப்பட்டிருந்த கோரிக்கையை ஆய்வு செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேலுமணி மற்றும் சத்திய நாராயண பிரசாத் ஆகியோர், பெண் வழக்கறிஞர்களுக்கான கழிப்பறையுடன் கூடிய தனி அறையினை ஒதுக்கி 17.02.2023 அன்று திறந்து வைத்தனர்.

Madras High Court
Madras High CourtTwitter

ஆனால் இந்த அறை ஆவணங்களை பாதுகாப்பு அறையாக பயன்படுத்த தேவை என்று கூறி 22.02.2023 அன்று உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி மூடி சீல் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் விவேகானந்தா மூலம் 8.04.2023 அன்று வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை ஏப்ரல் 24 அல்லது ஏப்ரல் 28இல் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com