அசரவைத்த சோழர் நீர் மேலாண்மை - சிதம்பரம் நடராஜர் கோயிலில் 10 கால்வாய்கள் கண்டுபிடிப்பு

அசரவைத்த சோழர் நீர் மேலாண்மை - சிதம்பரம் நடராஜர் கோயிலில் 10 கால்வாய்கள் கண்டுபிடிப்பு
அசரவைத்த சோழர் நீர் மேலாண்மை - சிதம்பரம் நடராஜர் கோயிலில் 10 கால்வாய்கள் கண்டுபிடிப்பு
Published on

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலுனுள் தண்ணீர் வெளியேற 10 கால்வாய்களை சோழர்கள் வடிவமைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழகத்தை தாக்கிய ‘புரெவி’புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடுமையான மழைப் பொழிவு இருந்தது. சிதம்பரத்தில் பெய்த மழையால், சிதம்பரம் நடராஜர் கோயிலானது முழுக்க முழுக்க வெள்ள நீரால் சூழ்ந்தது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம், கோயிலினுள் தண்ணீர் செல்வதற்கு ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா என்று ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் போது, கோயிலினுள் தண்ணீர் செல்வதற்கு ஏதுவாக வாய்க்கால்கள் இருப்பது கண்டறியப்பட்டது.அதன் வழியாக கோயிலினுள் தேங்கி இருந்த வெள்ளநீரானது வெளியேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்தும் நடந்த ஆய்வில் கோயிலினுள் உள்ளே பத்துக்கும் மேற்பட்ட வாய்க்கால்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

அந்தக் கால்வாய்கள் தண்ணீரை பள்ளமான பகுதியிலிருந்து மேடான பகுதிக்கு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிதம்பரம் கோயிலின் பள்ளமான பகுதியிலிருந்து மேடானப் பகுதியான திருப்பாற் கடலுக்கு தண்ணீர் செல்லும் வகையில் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோயில் தீட்சிதர் வெங்கடேஷ் கூறும் போது “ இந்தத் தொழிட் நுட்பம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை நாம் முறையாக பராமரிக்காமல் விட்டதால், கோயிலினுள் தண்ணீர் தேங்கியது.

இதனை சரிசெய்தோம் என்றால் வெளியே இருந்து கோயிலினுள் தண்ணீர் வராது. கோயிலினுள் உள்ளே தேங்கி நிற்கும் தண்ணீரும் தானே வெளியே சென்று விடும். அதுவே இதன் சிறப்பு. நகராட்சி சார்பில் கோயிலைத் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.

இது குறித்து நீர்மேலாண்மைக்குழு சிதம்பரநாதன் கூறும் போது “ கடந்த 8 ஆம் தேதி அதிகாரிகள் கோயிலை ஆய்வு செய்தனர். அவர்கள் 15 ஆம் தேதிக்குள் கால்வாய்களை கண்டறிந்து, கோயிலுனுள் உள்ள் தண்ணீரானது, தில்லை காளி அம்மன் கோயில் வடிகாலுக்கு செல்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டனர்.

அதனை தொடர்ந்து பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 9 ஆம் தேதி கோயிலுனுள் இருக்கும் 10 கால்வாய்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தில்லை காளியம்மன் கோயில் தெரு வரை கால்வாய்கள் இருப்பது தெரியவந்துள்ளது. கால்வாய்களின் நடுவில் அடைப்பு இருக்கிறது. தீயணைப்பு துறையினர் தில்லை காளியம்மன் கோயில் குளத்தில் முடிவடையும் கால்வாய்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.” என்றார்.


எந்த விதமான கருவிகளும் இல்லாமல், தண்ணீரானது பள்ளமான பகுதிலிருந்து மேடான பகுதிக்கு செல்லும் வகையில் சோழர்கள் வடிவமைத்துள்ள இந்த தொழிட் நுட்பம் மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com