’இந்திய அரசியலை சோவின் பெயரைத் தவிர்த்துவிட்டு எழுத முடியாது’: பிரதமர் மோடி புகழாரம்

’இந்திய அரசியலை சோவின் பெயரைத் தவிர்த்துவிட்டு எழுத முடியாது’: பிரதமர் மோடி புகழாரம்
’இந்திய அரசியலை சோவின் பெயரைத் தவிர்த்துவிட்டு எழுத முடியாது’: பிரதமர் மோடி புகழாரம்
Published on

மறைந்த சோ ராமசாமியின் பெயரைத் தவிர்த்துவிட்டு இந்திய அரசியல் வரலாற்றை எழுத முடியாது என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

சென்னையின் நடந்த துக்ளக் இதழின் 47ஆவது ஆண்டுவிழாவில் பிரதமர் மோடி காணொலி காட்சியின் மூலம் உரையாற்றினார். தமிழில் வணக்கம் கூறி தனது உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி, நாட்டுமக்களுக்கு பொங்கல் மற்றும் மகரசங்கராந்தி வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார். சோ ராமசாமியின் மறைவு தமக்கு தனிப்பட்ட இழப்பு என்று குறிப்பிட்ட மோடி, அவரால் விமர்சிக்கப்படாத அரசியல்வாதிகளே இல்லை என்றும் நினைவுகூர்ந்தார். விமர்சிக்கப்பட்டவர்களாலும் விரும்பப்பட்ட சோ, பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக துக்ளக் இதழை உருவாக்கினார் என்றும் பிரதமர் மோடி பேசினார். இந்திய அரசியல் வரலாற்றை ஒருவர் எழுத விரும்பினால், சோ ராமசாமியின் பெயரையும் அவரது அரசியல் விமர்சனத்தையும் தவிர்த்துவிட்டு எழுத முடியாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com