சித்திரை திருவிழா காலம்: புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்

சித்திரை திருவிழா காலம்: புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்
சித்திரை திருவிழா காலம்: புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்
Published on

சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் சித்திரை திருவிழாக்கள் நடைபெற்று வருவதால், புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் ஆடு விற்பனை அமோகமாக நடந்தது.

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட நான்கு மாவட்ட எல்லையில் உள்ள இந்த சந்தைக்கு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. தற்போது மாவட்டத்தில் மாரியம்மன் கோயில்களில் திருவிழா நடைபெறுவதால் ஆடுகளை வாங்குவதற்காக பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் ஆடுகளை வாங்க காலை முதலே குவியத் துவங்கினர்.

இன்று கூடிய சந்தைக்கு 500-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் 400-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் வந்தன. அதேசமயம் விற்பனைக்கு வந்த ஆடுகளின் விலை வழக்கத்தைவிட 300 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை உயர்ந்தது. குறிப்பாக கடந்த வாரம் 10 கிலோ வரையிலான வெள்ளாட்டு கிடாய் 6000 ரூபாய் வரை விற்பனையானது. இன்று அதே எடை கொண்ட வெள்ளாடு 7000 ரூபாய் வரை விற்பனையானது.

சென்றவாரத்தைவிட இந்த வாரம் அதிகளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், அம்மன் கோயில்களில் சித்திரை திருவிழாக்கள் நடைபெற்று வருவதால் இந்த வாரம் வெள்ளாடு மற்றும் ஆட்டுக்கிடா 1000 ரூபாய் வரை விலை உயர்ந்து விற்பனையானது எனவும், சந்தைக்கு கொண்டுவரப்பட்ட அனைத்து ஆடுகளும் மொத்தமாக 50 லட்ச ரூபாய்க்கு விற்பனையானது எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com