சின்னதம்பியைக் கண்டு மிரண்ட கும்கி மாரியப்பன்: மற்றொரு கும்கியை வரவழைக்க வனத்துறை திட்டம்

சின்னதம்பியைக் கண்டு மிரண்ட கும்கி மாரியப்பன்: மற்றொரு கும்கியை வரவழைக்க வனத்துறை திட்டம்
சின்னதம்பியைக் கண்டு மிரண்ட கும்கி மாரியப்பன்: மற்றொரு கும்கியை வரவழைக்க வனத்துறை திட்டம்
Published on

சின்னத்தம்பி யானையைக் கண்டு கும்கி யானை மிரண்டதால் அது பத்திரமாக முகாமிற்கு அனுப்பப்பட்டது. மற்றொரு கும்கி யானையை வரவழைக்க வனத்துறையினர் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் சுற்றித் திரிந்த சின்னத்தம்பி யானை கண்ணாடிபுதூர் என்ற இடத்தில் தஞ்சமடைந்தது. பின் கிருஷ்ணாபுரம் பகுதியில் கடந்த ஆறு நாட்களாக இருந்த சின்னத்தம்பி யானை நேற்று முன் தினம் செங்கழனிபுதூரில் முகாமிட்டது. 

பின்னர் அங்கிருந்து வெளியேறிய சின்னத்தம்பி யானை விவசாய நிலங்களுக்குள் புகுந்து, நள்ளிரவில் மடத்துக்குளம் அமராவதி ஆற்றைக் கடந்து திண்டுக்கல் மாவட்ட எல்லையான சாமிநாதபுரம் பகுதிக்கு வந்து சேர்ந்தது. மீண்டும் அமராவதி ஆற்றுப்படுகைக்கு வந்த சின்னத்தம்பி யானை, அங்கிருந்த தோட்டத்தில் புகுந்து கரும்பு, வாழை போன்றவை சாப்பிட்டு ஒய்வெடுத்தது. நீண்ட நேரம் ஓய்வெடுத்து பின் சின்னத்தம்பி யானை மாலையில் வெளியில் வந்தது. 

காட்டுக்குள் போகாமல் திருப்பூர் மாவட்டத்தில் ஊருக்கு அருகே சுற்றித்திரியும் சின்னதம்பி யானையை அதன் போக்கிலேயே வனத்துக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர். அதற்காக கும்கியானைகள் கலீமும், மாரியப்பனும் வரவழைக்கப்பட்டன. காட்டு யானை சின்னத்தம்பியை விரட்டும் போது கும்கி மாரியப்பன் யானை மிரண்டு ஓடியது. இதையடுத்து காட்டு யானையை விரட்டும் பணியில் இருந்து மாரியப்பன் விடுவிக்கப்பட்டு டாப்சிலிப் யானைகள் முகாமிற்கு திருப்பி அனுப்பப்பட்டது. 

மாரியப்பனுக்குப் பதிலாக மற்றொரு கும்கி யானையை வரவழைக்க வனத்துறையினர் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com