கொரனோ வைரஸ் பரவாமல் தடுக்க, சென்னை விமான நிலையத்தில் சீனாவிலிருந்து வரும் பயணிகள் மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே வெளியே அனுப்பப்படுகிறார்கள்.
சீனாவை அச்சுறுத்தி வரும் கொரனோ வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் தன்மை கொண்டது என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரனோ வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக, சீனாவிலிருந்து வரும் பயணிகள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை விமான நிலையத்தில் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு ஸ்கிரீனிங் பரிசோதனை செய்யப்படுகிறது.
இதுவரை சீனாவில் கொரனோ வைரஸால் பாதிக்கப்பட்டு 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில் , வைரஸ் பரவுவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை சீனா முன்னெடுத்துள்ளது. ஜப்பான், தாய்லாந்து நாடுகளை தொடர்ந்து அமெரிக்கா வரை கொரனே வைரஸ் பரவியுள்ளது.