நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட ஓடக்கொல்லி பழங்குடியின கிராமம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி எல்லையில் உள்ளது. இந்த கிராமத்தில் காட்டுநாயக்கர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வாழும் நிலையில் தேன் எடுப்பதற்காகவும் கிழங்கு சேகரிப்பதற்காகவும் முதுமலை வனப்பகுதிக்குள் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அவ்வாறு கடந்த 29ஆம் தேதி மதியம் அந்த கிராமத்தைச் சேர்ந்த கணவன் மனைவியான காளன் மற்றும் ஷைலா ஆகியோர் தங்களது குழந்தைகளான நந்தின் (5), ஸ்ரீநந்து ( 14 ) ஆகியோரை வீட்டில் விட்டுவிட்டு வனப்பகுதிக்குள் கிழங்கு சேகரிப்பதற்காக சென்று உள்ளனர். குழந்தைகளை பார்த்துக் கொள்ளுமாறு அருகில் உள்ள உறவினர்களிடம் சொல்லிவிட்டு வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர்.
29ஆம் தேதி மாலை 6 மணி வரை குழந்தைகள் இருவரும் வீட்டின் முன்புறம் இருந்துள்ளனர். அதன் பிறகு இருவரும் காணாமல் போயிருக்கிறார்கள். உறவினர்கள் பல இடங்களில் தேடியும் குழந்தைகள் இருவரும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக நேற்று மாலை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் அடிப்படையில் காணாமல் போன குழந்தைகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஒருவேளை பெற்றோர்களே இரண்டு குழந்தைகளையும் வனப்பகுதிக்குள் அழைத்து சென்றார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
வனப்பகுதிக்குள் கிழங்கு சேகரிப்பதற்காக சென்ற பெற்றோர்கள் இருவரும் எங்கிருக்கிறார்கள் என்ற விவரமும் இதுவரை தெரியவில்லை. அவர்களையும் தேடும் பணி வனப்பகுதிக்குள் நடந்து வருகிறது. காவல்துறை தரப்பில் குழந்தைகளின் உறவினர்கள் வீடுகள் உள்ள பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு கிழங்கு சேகரிப்பதற்காக வனப்பகுதிக்குள் சென்று உள்ளனர். கடந்த 29ஆம் தேதி இருவரும் வனப்பகுதிக்குள் சென்ற நிலையில், அன்று மாலை முதல் அவர்களது இரண்டு குழந்தைகளான நந்தினி மற்றும் ஸ்ரீந்த் ஆகிய இருவரை காணவில்லை. குழந்தைகளை வனப்பகுதிக்குள் தேடும் பணியில் வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். ஒருவேளை பெற்றோர்களே குழந்தைகளை வனப்பகுதிக்குள் அழைத்து சென்றார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
வனப்பகுதிக்குள் கிழங்கு சேகரிக்க சென்ற பெற்றோர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்தால் மட்டுமே, குழந்தைகள் எங்கு இருக்கிறார்கள் என்ற விவரம் தெரிய வரும் என்பதால் பெற்றோர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வனப்பகுதிக்குள் சென்றுள்ள பெற்றோர்களை தேடுவதற்காக ட்ரோன் கேமராக்களை பயன்படுத்தவும் அதிகாரிகள் முடிவு செய்து இருக்கிறார்கள். நக்சல் தடுப்பு பிரிவு போலீசாரும் வனத்துறையினரோடு இணைந்து வனப்பகுதிக்குள் பெற்றோர்களை தேடி வருகின்றனர்.