மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைபட்டியில் முன்னாள் அமைச்சர் கக்கன் அவர்களின் 115 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் மதுரை கிழக்கு மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவுமான ராஜன் செல்லப்பா கக்கன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
இதைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அவர், ”கடந்த சில நாட்களுக்கு முன்பு 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடுவது வரை செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருப்பாரா என வினவி இருந்தேன். இந்த ஆட்சிக்கு மிக விரைவில் ஆபத்து நடைபெற காத்திருக்கிறது. தான் செய்த தவறுக்கு தண்டனையாக.!
அதிமுக தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளர்கள் பலமுறை சைபர் கிரைம் பயன்படுத்தி சாதாரண விமர்சனத்திற்கு (மீம்ஸ்) கூட திமுக அரசு அவர்கள் மீது நடைமுறையை கையாளுகிறது. அரசாணை மூலம் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீட்டிப்பு செய்ததன் மூலம் அரசு மரபை மீறி ஆளுநரோடு நல்லுறவை ஏற்படுத்த முதல்வர் தவறிவிட்டார்.
இந்த அரசு எடுத்த முடிவு அன்றைக்கு இருந்த பிரதமர் இந்திராவை விமர்சித்து மாட்டிக் கொண்டனர். இது போன்ற அரசாணை தமிழகத்தில் எப்போதும் வெளியிட்டதில்லை. முதல்வர் மரபை மீறி இருக்கிறார். அந்த மீறலுக்கு எதை முதல்வர் சந்திக்க போகிறார் என தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்” என்று தெரிவித்தார்.