அரசு சார்பில் ரூ.3 கோடி மதிப்பில் நடமாடும் டீ கடைகள்: தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

அரசு சார்பில் ரூ.3 கோடி மதிப்பில் நடமாடும் டீ கடைகள்: தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
அரசு சார்பில் ரூ.3 கோடி மதிப்பில் நடமாடும் டீ கடைகள்: தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
Published on

தமிழ்நாடு சிறு, குறு & நடுத்தர தொழில் துறை சார்பில் ரூ.3 கோடி மதிப்பில் 20 நடமாடும் டீ விற்பனை கடைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் துவக்கி வைத்தார்.

அந்நிகழ்வில் பேசிய Indcoserve நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுப்ரியா சாஹூ, புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக பேட்டியொன்று அளித்தார். அப்போது அவர், “பழங்குடி மக்கள், சிறு தேயிலை உற்பத்தியாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் நடமாடும் டீ விற்பனை கடைகள் துவக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்

அவர் பேசுகையில், “தேயிலை விவசாயிகளின் நலன், Indcoserve-இன் வியாபாரத்தை விரிவாக்குதல், பழங்குடி மக்கள் & இளைஞர்களுக்கு வாய்ப்பளித்தல் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசின் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நடமாடும் டீ விற்பனை கடைகள் முதற்கட்டமாக சென்னை, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது.

நடமாடும் டீ கடைகளில் டீ, காபி மற்றும் சிறு தானிய உணவுகள் குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Cafe Coffee Day, Starbucks போல் ஒரு பிரபலமான Brand ஆக நடமாடும் டீ கடைகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். படிப்படியாக அனைத்து மாவட்டங்களுக்கும் இதன் சேவை விரிவாக்கப்படும்” என்றார்.

நிகழ்வில், Indcoserve நிறுவனத்தின் தரமான பொருட்களை சிறந்த முறையில் ஆன்லைனிலும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுப்ரியா சாஹூ பேசியது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நடமாடும் டீ கடை துவக்க நிகழ்வில் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் இறையன்பு, Indcoserve CEO சுப்ரியா சாஹூ, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிஜி தாமஸ் வைத்யன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com