மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமி நாளை ஆய்வு மேற்கொள்கிறார்.
ஏற்கெனவே நிவர் புயலால் கடலூர் மாவட்டம் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு ஆய்வு முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து புரெவி புயலை ஒட்டி பெய்த பெருமழை மற்றும் வெள்ளத்தால் கடலூர் மாவட்டம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் ஏக்கர் விளைநிலைத்தில் மழைநீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியான கனமழையால் கடலூர் மாவட்டம் முழுவதும் அதிக சேதமடைந்திருக்கக் கூடிய நிலையில், முதலமைச்சர் பழனிசாமி நாளை கடலூர் சென்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.
ஏற்கெனவே அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தலைமையில் சேதப் பணிகளைப் பார்வையிட்டு, அங்கு ஆய்வு மேற்கொண்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும்நிலையில், நாளை முதலமைச்சரே நேரில் சென்று அந்த மாவட்டத்தைப் பார்வையிடவுள்ளார். அதனைத்தொடர்ந்து நாளை மறுநாள் நாகை, திருவாரூர் மாவட்டங்களை பார்வையிடவுள்ளார்.