18 முன்னணி நிறுவனங்கள்.. ரூ. 7,616 கோடி மதிப்பில் தமிழ்நாட்டிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் பொருளாதாரமாக உயர்த்தும் நோக்கில் அமெரிக்காவில் 18 முன்னணி நிறுவனங்களுடன் தமிழக அரசு 7,616 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புரிந்துண்ர்வு ஒப்பந்தம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புரிந்துண்ர்வு ஒப்பந்தம்pt web
Published on

அமெரிக்காவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.

அந்தவகையில், முதலமைச்சர் முன்னிலையில், தமிழக அரசிற்கும், RAPID GLOBAL BUSINESS SOLUTIONS நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 100 கோடி ரூபாய் முதலீட்டில் ஓசூரில் மேம்பட்ட மின்னணு மற்றும் டெலிமாடிக்ஸ் உற்பத்தி நிறுவனம் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, RAPID GLOBAL BUSINESS SOLUTIONS நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் நானுவா சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புரிந்துண்ர்வு ஒப்பந்தம்
திருவள்ளூர்: ஏழை இளைஞர்களின் வங்கிக் கணக்கில் ரூ.3 கோடி பணப்பரிமாற்றம் - ED விசாரணை 4 பேர் கைது

முன்னதாக, முதலமைச்சரின் அமெரிக்க சுற்றுப் பயணத்தின் போது உலகின் 18 முன்னணி நிறுவனங்களுடன் 7,616 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களைச் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com