கோயம்புத்தூர் எல்காட் ஐ.டி. பார்க்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். அதன் மதிப்பு என்ன? இதன்மூலம் எத்தனை பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகின்றன? என்பதை இங்கே பார்க்கலாம்...
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என கொண்டாடப்படும் கோயம்புத்தூர், ஐ.டி. நிறுவனங்களின் அடையாளமாகவும் மாறி வருகிறது. கோவையில் தற்போது 700-க்கும் அதிகமான ஐ.டி. நிறுவனங்கள் உள்ளன. கோவையில் ஐ.டி. துறை ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 20 விழுக்காடு வளர்ச்சியை பெற்று வருகின்றன.
இந்த நிலையில்தான், விளாங்குறிச்சி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய எல்காட் கட்டடம் நிறுவப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்னணு நிறுவனம் சார்பில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய கட்டடம், 8 தளங்களை கொண்டது. சுமார் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்திருக்கிறது. இங்கு புதிய புதிய ஐ.டி. நிறுவனங்கள் உருவாகும் போது அவை சார்ந்த மற்ற தொழில்களும் விரிவடைவதற்கான வாய்ப்புகளும் உருவாகிறது. மேலும், சுமார் 3,500 பேருக்கு வேலை வாய்ப்பு
கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.