வடகிழக்கு பருவமழை… அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுரை!

பருவமழை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பருவமழை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “கடந்த 2 ஆண்டுகளில் மேற்கொண்ட பணிகளால் மழை நேரத்தில் பெரிய பாதிப்புகள் ஏற்படுவதில்லை; பேரிடர் அபாயங்களை குறைத்திட சிறப்பு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. அதேநேரம் பல்வேறு மாவட்டங்களில் சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன; இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாவதோடு, விபத்துகளும் ஏற்படுவதாக தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இது ஏற்புடையது அல்ல.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்முகநூல்

மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர் வாரிய பணிகள், மெட்ரோ ரயில் பணிகள், மின்வாரிய பணிகள் மட்டுமல்லாமல் பொதுவாகவே பழைய சாலைகளின் நிலை போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளன; இந்த நிலை மாற்றப்பட வேண்டும். நம் மாநில சாலைகள் தரமானதாக இருக்கின்றது என்று மக்கள் பாராட்டும் வகையில் அமைக்கப்பட வேண்டும்.

 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
“என் மிகப்பெரிய சக்தியே என் மனைவி துர்கா அவர்கள்தான்” - மேடையில் நெகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இதனை வெறும் அறிவுரையாக மட்டும் நான் கூறவில்லை, அமைச்சர்களும், அரசு செயலாளர்களும் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இதுதொடர்பாக நானும் களஆய்வு செய்யவுள்ளேன்; இந்த வாரத்தில் சென்னையில் ஆய்வு நடத்த உள்ளேன். சாலைப் பணிகளை மேற்கொள்ளும் துறைகள் அனைத்தும் துரிதமாக, தரமாக பணிகளை மேற்கொண்டு முடிக்க வேண்டும் என கண்டிப்போடு தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பேசினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com