தமிழ் மக்கள் விரும்பும் நல்லாட்சியை வழங்கிடுவேன் - முதல்வர் மு.க ஸ்டாலின்

தமிழ் மக்கள் விரும்பும் நல்லாட்சியை வழங்கிடுவேன் - முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ் மக்கள் விரும்பும் நல்லாட்சியை வழங்கிடுவேன் - முதல்வர் மு.க ஸ்டாலின்
Published on

தமிழகத்தில் நேர்மையான, தூய்மையான, வெளிப்படையான நிர்வாகம் நடக்கும் என முதல்வர் மு.க ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

கடந்த 7ஆம் தேதி தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு.க ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.

இந்நிலையில், முதல்வர் மு.க ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு ஒரு கடித்தத்தை எழுதியுள்ளார். அதில், ‘’நாம் ஒன்று சேர்ந்து உழைக்கவேண்டும். திமுகவினர் மாற்றுக்கட்சி தோழர்களோடு நட்புணர்வுடன் மக்கள் பிரச்னைகளை அணுகி தீர்வுகாண வேண்டும். ஜனநாயகக் களத்தில் எதிரெதிர் அணிகளாக மோதுவது இயல்பு என்றாலும் நாம் எல்லாரும் ஒரு தாய்மக்கள். எழுச்சிபெற்ற தமிழகத்தை நமது தலைமுறை அடுத்த தலைமுறைக்கு அளித்துச்செல்ல வேண்டும்.

கொரோனாவிற்காக உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் மருத்துவத்துறையினர் உட்பட அனைவரும் அங்கீகரிக்கப்படுவர்.

தமிழ் மக்கள் விரும்பும் நல்லாட்சியை வழங்கிடுவேன் என நான் உறுதியளிக்கிறேன். சவால்களையும், நெருக்கடிகளையும் வலிமையுடன் எதிர்கொண்டு நல்லாட்சி வழங்குவேன். இது திமுக அரசு அல்ல; எவ்வித பேதமும் பாகுபாடும் இல்லாத, எல்லாப்பிரிவையும் அரவணைத்துச் செல்லும் அரசு இது. என் தலைமையில் அமைந்த அரசு என்றாலும், அனைத்து மக்களுக்கும் சொந்தமான தமிழக அரசு’’ என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com