சென்னையில் நேற்று பெய்த கனமழை தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்து, நள்ளிரவில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களையும் பார்வையிட்டார்.
<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">திருச்சியில் இருந்து திரும்பியவுடன், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டளை மையத்திற்கு வந்து, எடுக்கப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளேன். நிலைமை விரைந்து சீர்செய்யப்படும்.<a href="https://twitter.com/hashtag/ChennaiRains2021?src=hash&ref_src=twsrc%5Etfw">#ChennaiRains2021</a> <a href="https://t.co/fR7jWpjiI8">pic.twitter.com/fR7jWpjiI8</a></p>— M.K.Stalin (@mkstalin) <a href="https://twitter.com/mkstalin/status/1476631585617186816?ref_src=twsrc%5Etfw">December 30, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
சென்னையில் நேற்று பிற்பகலில் தொடங்கி சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக 20 சென்டி மீட்டரக்கும் அதிகமான மழை மாநகர் முழுக்க பதிவாகியது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று நள்ளிரவு நேரத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது முதல்வர் ‘மழை பாதிப்பு எங்கெங்கெல்லாம் அதிகமாக இருக்கிறது, எங்கெங்கெல்லாம் மழைநீர் தேங்கி இருக்கிறது, மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை, மோட்டார்கள் மூலம் எத்தனை இடங்களில் கண்ணீர் வெளியேற்றப்படுகின்றன, மக்களுக்கு தேவையான பணிகளை சென்னை மாநகராட்சியின் என்ன என்ன செய்துள்ளது’ போன்ற விஷயங்களை, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் கேட்டறிந்தார்.
அதன் தொடர்ச்சியாக, அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் மாளிகையில் ஆலோசனையில் ஈடுபட்டார். ரிப்பன் மாளிகைக்கு சுற்றிலும் மழை நீர் தேங்கியிருந்ததால், அதனை ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்றதையும் முதல்வர் நேரில் ஆய்வு செய்தார். அதேபோல பெரியமேடு பகுதியில் மழைநீர் வெளியேற்றம், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள N.S.B சாலையில் மழைநீர் தேங்கி இருப்பது உள்ளிட்ட இடங்கலிலும் அவர் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, முதலமைச்சருடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.
முதலமைச்சரின் இந்த ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, “வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை விட பல மடங்கு கூடுதலாக சென்னையில் மழை பெய்துள்ளது. இந்த மழை காரணமாக 4 சுரங்கப்பதையில் மழை நீர் தேங்கியுளது. காலையில் மழைநீரை முழுவதுமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுள்ளது. மழை நீரை வெளியேற்ற சென்னை முழுவதும் 162 மோட்டார் பம்புகள் மாநகராட்சி சார்பில் மழை நீர் வெளியேற்றும் பணியில் உள்ளது. தேவையான இடங்களில் மோட்டார் பம்புகள் மூலம் துரிதமாக மழைநீர் வெளியேற்ற முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி அடுத்தடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வரை, மழை நிவாரண முகாம்களில் எவரும் தங்கவைக்கப் படவில்லை. இருப்பினும் சென்னை மாநகராட்சி சார்பில் 169 முகாம்கள் தயார் நிலையில் உள்ளது” எனக் குறிப்பிட்டார்.