ஊரடங்கு நீட்டிப்பா? மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை
ஊரடங்கை நீட்டிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
கொரோனா வைரஸ் தாக்குதலால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின்னர், சில தளர்வுகளுடன் நான்கு கட்டங்களாக ஊரட்ங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நான்காம் கட்ட ஊரடங்கு வரும் மே 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் ஆலோசித்து வருகின்றன.
இந்நிலையில், ஊரடங்கை நீட்டிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனைக்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு குறித்த செய்தி வெளியாகலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.