மத்திய தொல்லியல் துறையின் தொல்லியல் பட்டயப்படிப்புக்கான கல்வித்தகுதியில் தமிழை சேர்க்கக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “மத்திய தொல்லியல் துறையின் தொல்லியல் பட்டயப்படிப்புக்கான கல்வித்தகுதியில் தமிழ் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. பல மொழிகளின் 48,000 பழங்கால கல்வெட்டுகளில் 28,000க்கும் அதிகமாக தமிழில் உள்ளன. முதுகலை தொல்லியல் பட்டயப் படிப்பில் சேர கல்வித் தகுதியாக தமிழையும் சேர்க்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.