'விஜய், அஜித் ஆகியோர் ரசிகர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்' - சீமான்

'விஜய், அஜித் ஆகியோர் ரசிகர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்' - சீமான்
'விஜய், அஜித் ஆகியோர் ரசிகர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்' - சீமான்
Published on

புதுக்கோட்டையில் குடிநீரில் மலம் கலந்த சாதியின் ஓட்டிற்காக தான் முதல்வர் அமைதியாக இருக்கிறார் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வாரிசு இசை வெளியூட்டு விழாவில் ரசிகர்கள் காவல்துறையினரிடம் அடிவாங்கினர் விஜய் அஜித் மீதான மோகத்தால் இவ்வாறு நடப்பதை விஜய் அஜித் தன் ரசிகர்களிடம் கூறி தவிர்க்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் விஸ்வநாததாஸ் நினைவு நாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் சார்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், இசையின் மூலமும் நடிப்பின் மூலம் சுதந்திர உணர்வை ஊட்டியவர் விஸ்வநாததாஸ் என்று கூறினார்.

கொரானா காலத்தில் தற்காலிக பணியாளர்களாக நியமித்த செவிலியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறித்து பேசிய அவர், அன்றைக்கு அரசு மருத்துவர்கள் செவிலியர்கள் கடவுளாக இருந்தனர். எதிர்கட்சியாக அப்போது இவர்களுக்கு ஆதரவாக இருந்தவர்கள், தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் வேலையை நிரந்தரமாக்காமல் இருப்பது துரோகம் என்றும் இன்னொரு கொரானா வந்தால் தான் அவர்களின் அருமை தெரியும் என்றார்.

மேலும் புதுக்கோட்டையில் குடிநீரில் மலம் கலந்த விவகாரத்தில் தீண்டாமை தடுப்புக் குழுவின் மாநிலத்தலைவர் முதல்வர், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுத்தால் மலம் கலந்த சாதியின் ஓட்டு போய்விடும் என்று பயப்படுகிறார்கள். இவர்கள் ஏன் பெரியாரை, சமூகநீதியை, சாதி ஒழிப்பை பற்றி பேசவேண்டும். ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கூட இன்னும் போகவில்லை என்பது குறித்து, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தானாக போகமுடியாது, முதல்வர் சொல்லாமல் போனால் அவர் பதவியில் இருக்கமாட்டார். மோடியின் தாய் மறைவிற்கு செல்லும் முதல்வர் தன் குடிமக்கள் பிரச்சனைக்கு ஏன் செல்லவில்லை எனக் கேள்வி எழுப்பினார். மேலும் பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தை தீர்வுகான நினைத்து பேச்சுவார்த்தை நடத்தினால் முடிவு கிடைக்கும் ,சொந்த மக்களை இவர்கள் ஏமாற்றி வருகிறார்கள்.

வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் ரசிகர்கள் அடிவாங்கியது குறித்து சீமானிடம் கேட்ட கேள்விக்கு, சிலர் 2 படம் நடித்ததால் தன்னை தலைவர் என்று நினைத்து கொள்கிறார்கள், அண்டை மாநிலமான கேரளாவில் இல்லாத சினிமா மோகம் தமிழகத்தில் உச்சசகட்டத்தில் இருக்கிறது. ஏற்கனவே நடிகர் விஜய்-அஜித்திடம் பட வெளியீடு அன்று கட்அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்வதை நிறுத்த சொல்லி இருந்தேன், அதனை நிறுத்தி விட்டார்கள், அதேபோல ரசிகர்களிடம் சொல்லி இதையும் நிறுத்தி கொள்ள வேண்டும் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com