‘என் ஆசை நிறைவேறிடுச்சு...’ - முதல்வர் கொடியேற்றிய சுதந்திர தின நிகழ்வில் 8 வயது சிறுவன் நெகிழ்ச்சி!

முதலமைச்சர் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றுவதை நேரில் காண ஆசை என முதல்வருக்கு கடிதம் எழுதிய மாணவனை சிறப்பு அழைப்பாளராக சுந்ததிர தின விழாவிற்கு அழைத்து வந்தனர் அதிகாரிகள்.

இராமநாதபுரம் மாவட்டம் பாப்பனம் கிராமத்தை சேர்ந்த எட்டு வயது சிறுவன், லிதர்சன். இவர் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் கொடியேற்றுவதை நேரில் பார்க்க வேண்டுமென முதலமைச்சருக்கு கடிதம் மூலமாக கோரிக்கை வைத்திருந்தார்.

சுதந்திர தின விழாவில் தன் தாயுடன் மாணவர் லிதர்சன்
சுதந்திர தின விழாவில் தன் தாயுடன் மாணவர் லிதர்சன்

இந்த கோரிக்கையின் அடிப்படையில் மாணவர் லிதர்சனும் அவரது தாயாரும் சிறப்பு விருந்தினர்களாக இன்று சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். விருந்தினர் பகுதியில் அமரவைக்கப்பட்ட மாணவர் லிதர்சன், முதலமைச்சர் அணிவகுப்பை பார்வையிட்டு செல்லும் போது முதலமைச்சரை நேரில் பார்த்ததில் உற்சாகமாக காணப்பட்டார்.

சுதந்திர தின விழாவில் மாணவர் லிதர்சன்
“ஒன்பதாண்டுகளாக இந்தியாவைப் பீடித்துள்ள பிணிகளை அகற்றுவோம்!”- முதல்வர் ஸ்டாலின் ட்வீட்!

அதோடு கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் கொடியேற்றுவதை பார்த்ததும் மகிழ்ச்சியில் திளைத்ததை பார்க்கமுடிந்தது.

NGMPC139

தான் எழுதிய கடிதத்தை கவனத்தில் வைத்து முதலமைச்சர் தன்னை அழைத்ததும் கொடியேற்றுவதை பார்க்க வைத்ததும் மகிழ்ச்சியளிப்பதாக மாணவர் லிதர்சன் தெரிவித்தார். முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாக மாணவனின் தாயார் ஆனந்தவள்ளியும் தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com