நாளை மறுநாள் 4-வது பொதுமுடக்கம் முடியும் நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் மே 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவு பெறுகிறது. இத்தகைய சூழலில் பொது முடக்கத்தை நீட்டிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். பொது முடக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் தளர்த்த முடியும் என ஏற்கெனவே நிபுணர்கள் குழு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். எனவே அடுத்தக்கட்ட ஊரடங்கு குறித்து விரைவில் செய்திகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.