பட்டாசு ஆலை விபத்து - முதல்வர் ஒரு லட்சம் நிதியுதவி

பட்டாசு ஆலை விபத்து - முதல்வர் ஒரு லட்சம் நிதியுதவி
பட்டாசு ஆலை விபத்து - முதல்வர் ஒரு லட்சம் நிதியுதவி
Published on

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் வரகனூரில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. அங்கு இன்று காலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 4 பெண் தொழிலாளர்கள் உட்பட 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பலர் பட்டாசு ஆலையில் சிக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் வெடிவிபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். காயமடைந்த 3 பெண்கள் உட்பட 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கட்டட இடிபாடுகளில் சிக்கி சிலர் உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. 

வெடிவிபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் பட்டாசு ஆலையின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நெல்லை ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் பட்டாசு ஆலைக்கு தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளது எனவும் ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிலையில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். வெடிவிபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தீ விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்கவும், உடனடியாக சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com