அஞ்சலக படிவங்கள் தமிழில் இருக்கும் என அஞ்சல் துறை உறுதியளித்துள்ளதாக சு.வெங்கடேசன் தகவல்

அஞ்சலக படிவங்கள் தமிழில் இருக்கும் என அஞ்சல் துறை உறுதியளித்துள்ளதாக சு.வெங்கடேசன் தகவல்
அஞ்சலக படிவங்கள் தமிழில் இருக்கும் என அஞ்சல் துறை உறுதியளித்துள்ளதாக சு.வெங்கடேசன் தகவல்
Published on
தமிழக அஞ்சலகங்களில் பயன்படுத்தப்படும் படிவங்கள் அனைத்தும் தமிழில் இருக்கும் என தலைமை அஞ்சல் பொது மேலாளர் உறுதியளித்துள்ளதாக மதுரை தொகுதி எம்.பி. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள அஞ்சலகங்களில் பணவிடை, சிறுசேமிப்பு தொடர்பான படிவங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே இருப்பதாகவும் ஆனால் தமிழில் இல்லை என்றும் கூறி ஒன்றிய அமைச்சருக்கும் தலைமை அஞ்சல் பொது மேலாளருக்கும் கடிதம் எழுதியிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தலைமை அஞ்சல் பொது மேலாளரை சந்தித்து மாநில மொழிகள் புறக்கணிக்கப்படுவதையும் இந்தி திணிப்பையும் ஏற்க முடியாது என தெரிவித்ததாக சு.வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து தலைமை பொது மேலாளர் தமிழ்நாட்டில் அஞ்சல் துறை படிவங்கள் அனைத்திலும் தமிழ் இருக்கும் என எழுத்துப்பூர்வமாக உறுதியளித்துள்ளார் என சு.வெங்கடேசன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 14 ஆயிரம் அஞ்சலகங்களிலும் அடுத்த இரு வார காலத்துக்குள் பணவிடை மற்றும் சேமிப்புக் கணக்கு படிவங்களில் தமிழ் இருக்கும் என்றும் பிற 40 வகையான படிவங்களும் அடுத்த ஒரு மாதத்தில் அஞ்சலகங்களுக்கு அனுப்பப்படும் என அவர் கூறியுள்ளதாகவும் சு.வெங்கடேசன் கூறியுள்ளார். இது அன்னைத்தமிழுக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி என சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com