சென்னை - மழையில் குடைபிடித்தபடி செல்போன் பேசிக்கொண்டே நடந்த இளைஞர் உயிரிழப்பு

சென்னையில் மழையில் குடை பிடித்துக்கொண்டு செல்போன் பேசியபடி சென்ற நபர் திடீரென்று கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் செல்போனை எடுத்துப் பார்த்தபோது செல்போன் கருகிய நிலையில் இருந்ததும் அதில் லேசாக மின்சாரம் பாய்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த மணிகண்டன்
உயிரிழந்த மணிகண்டன்புதிய தலைமுறை
Published on

சென்னை பெருங்குளத்தூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 23) மேற்கு மாம்பலம் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் விஷூவல் எடிட்டராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று வேலை முடித்து வீட்டுக்குச் செல்லும்போது கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக குடையைப் பிடித்துக் கொண்டு மேற்கு மாம்பலம் ஏரிக்கரை சாலையில் ஒரு அடி அளவிற்கு தேங்கியிருந்த தண்ணீரில் மெதுவாக நடந்தபடி செல்போன் பேசி கொண்டு சென்றுள்ளார்.

மணிகண்டன்
மணிகண்டன்

அப்போது திடீரென செல்ஃபோனை கீழே போட்டுவிட்டு கீழே விழுந்து துடித்து இறந்துள்ளார். ஒரு அடி ஆழ தண்ணீரில் கிடந்த கைபேசியை எடுத்து காவல்துறையினர் சோதனை செய்தபோது மணிகண்டனின் கைப்பேசி off ஆகாமல் லேசாக கருகிய நிலையில் இருந்ததும் அதனை கையில் தொட்டால் லேசான மின்சாரம் பாய்வதும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மணிகண்டன்
விரைவில் புயலாக மாற வாய்ப்பு.. மிக கனமழை பெய்யலாம்... அடுத்த 4 நாட்களுக்கு மழை தொடரும்!

மேலும் பரிதாபமாக உயிரிழந்த மணிகண்டனனின் செல்போன் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு அவரின் உடலானது பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com