சென்னை: மாமூல் தர மறுத்த பெண் வியாபாரி... மதுபோதையில் இருந்த ரவுடியால் அரங்கேறிய கொடூர சம்பவம்!

சென்னை திருவொற்றியூர் பகுதியில் ரவுடிக்கு மாமூல் தர மறுத்த பெண் வியாபாரி கத்தியால் அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையை தடுக்க முயன்ற அந்த பெண்ணின் கணவரும் படுகாயமடைந்தார்.
சென்னை திருவொற்றியூரில் பெண் படுகொலை
சென்னை திருவொற்றியூரில் பெண் படுகொலைபுதிய தலைமுறை
Published on

சென்னை திருவொற்றியூர் பகுதியில் ரவுடிக்கு மாமூல் தர மறுத்த பெண் வியாபாரி கத்தியால் அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையை தடுக்க முயன்ற அந்த பெண்ணின் கணவரும் படுகாயமடைந்தார்.

சம்பவத்தின்படி கெளரி என்ற பெண் சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் அருகில் உள்ள சன்னதி தெருவில் பழ வியாபாரம் செய்துவந்தார். நேற்று கணவருடன் அமர்ந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த பர்மா சேகர் என்பவர் மதுபோதையில், கௌரியிடம் மாமூல் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.

சென்னை திருவொற்றியூரில் பெண் படுகொலை
’திராவிட வரலாறு என பேசி நமது சுதந்திர போராட்ட வீரர்களை மறந்துவிட்டார்கள்’- ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

கெளரி பணம் தர மறுத்ததால் பர்மா சேகர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கௌரியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். கொலையை தடுக்க வந்த கெளரியின் கணவர் மாரியையும் கத்தியால் தாக்கியுள்ளார். அங்கு கூடிய பொதுமக்கள் பர்மா சேகர் தப்பியோடிவிடாமல் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com