சென்னை: கொட்டித்தீர்த்த கனமழை... வேரோடு சாய்ந்த மரம்... துரிதமாக செயல்பட்ட போக்குவரத்து போலீசார்!

கனமழை காரணமாக ராட்சத மரம் சாலையில் சரிந்து விழுந்ததால் அம்பத்தூரில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துரிதமாக செயல்பட்ட போக்குவரத்து போலீசாரால், விரைந்து இயல்பு நிலை மீட்கப்பட்டது.
வேரோடு சாய்ந்த மரம்
வேரோடு சாய்ந்த மரம்pt desk
Published on

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

சென்னையில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக திருப்பதி தேசிய நெடுஞ்சாலை - அம்பத்தூர் அருகே பாடியில் ராட்சத மரம் அடியோடு சாலையில் சாய்ந்தது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் காலையில் விழுந்து கிடந்த மரத்தை துரிதமாக செயல்பட்டு அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

வேரோடு சாய்ந்த மரம்
வேரோடு சாய்ந்த மரம்pt desk

இதனால் சுமார் அரை மணி நேரம் அம்பத்தூர் அருகே பாடியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கொட்டும் மழையிலும் சாலையில் விழுந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்திய போலீசாருக்கு வாகன ஓட்டிகள் பாராட்டு தெரிவித்தனர்.

வேரோடு சாய்ந்த மரம்
பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்| அனுபவ சான்றிதழ் கேட்டதற்காக 3 மாத சம்பளம் கேட்ட நிறுவனம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com