சென்னை: அதிவேகமாக சென்ற ஆட்டோ சாலை தடுப்பில் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு

சென்னை: அதிவேகமாக சென்ற ஆட்டோ சாலை தடுப்பில் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு
சென்னை: அதிவேகமாக சென்ற ஆட்டோ சாலை தடுப்பில் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு
Published on

அதிவேகமாக சென்ற ஆட்டோ சாலை தடுப்பில் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.  மூவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள இரும்புலியூர் சிக்னல் அருகே ஆட்டோ ஒன்று அதிவேகமாக சென்றுள்ளது. அப்போது முன்னால் சென்ற பேருந்தின் மீது மோதாமல் இருக்க ஆட்டோவை கட்டுபடுத்த முயன்றபோது ஆட்டோ வலதுபக்க சாலையின் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐசக்ராஜ் (51), உத்திரமேரூரைச் சேர்ந்த சுந்தரராஜன் (37), பாண்டிச்சேரியை சேர்ந்த நாகமுத்து (36), ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஏழுமலை (65), ரஜினிகாந்த் (45), ஆனந்த்குமார் (27), ஆகிய மூவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தப்பியோடிய ஆட்டோ ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com