முழு கொள்ளளவை எட்டிவிட்டதா செம்பரம்பாக்கம் ஏரி?

முழு கொள்ளளவை எட்டிவிட்டதா செம்பரம்பாக்கம் ஏரி?
முழு கொள்ளளவை எட்டிவிட்டதா செம்பரம்பாக்கம் ஏரி?
Published on

செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் நீர் அளவு அதிரித்தால் உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக, சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் நீர் இருப்பு அதிகரித்து வருகிறது. மழை பதிவு மற்றும் ஏரிகளின் நீர் அளவு குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் சென்னை எழிலகத்தில் புதிய தலைமுறைக்கு அளித்த சிறப்பு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில், கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிக அளவு மழை பெய்துள்ளதாக தெரிவித்தார். மேலும்,  சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 6-7 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார். சென்னையில் எந்த சுரங்கப்பாதையிலும் மழைநீர் தேங்கவில்லை என்றும் 120 பம்பு செட்டுகள் வைத்து மழைநீர் அகற்றப்பட்டு வருவதாகவும் சத்யகோபால் தெரிவித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழை விவரம்:-

  • தலைஞாயில்-27 செ.மீ
  • திருப்பூண்டி-24 செ.மீ
  • வேதாராண்யத்தில் -6 செ.மீ
  • திருத்துறைப்பூண்டி-12 செ.மீ
  • மயிலாடுதுறை-10 செ.மீ
  • பொன்னேரி-10 செ.மீ

மேலும், செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவான 17.8 அடியில் 7.7 அடி மட்டுமே நீர் உள்ளதாகவும், நீர் அளவு அதிகரிக்கும் பட்சத்தில் உரிய நேரத்தில் மக்களுக்கு தெரிவிக்கப்படும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் கூறினார். செம்பரம்பாக்கத்திற்கு வினாடிக்கு சுமார் 1700 கன அடி நீர் வரத்து உள்ளதாகவும், அபாய நீர் இருப்பிற்கு இன்னும் நிறைய நீர் தேவைப்படும் என்றார். 

ஏரிகளின் நீர் இருப்பு விவரம் - அடைப்புக்குறியில் முழுக் கொள்ளளவு

  • செம்பரம்பாக்கம் - 11.05 அடி(24) 
  • பூண்டி                    -  21.5 அடி (35)
  • சோழவரம்           -  7.75 அடி (17.86)
  • ரெட்ஹில்ஸ்     -  7  அடி (21.2)
  • வீராணம்             -  5.5 அடி(8.5)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com