”இது உ.பி, ம.பி அல்ல; ஆர்எஸ்எஸ் எதிர்பார்க்கும் ரத்தம் இங்கு கிடைக்காது”-சுப.வீரபாண்டியன்

”இது உ.பி, ம.பி அல்ல; ஆர்எஸ்எஸ் எதிர்பார்க்கும் ரத்தம் இங்கு கிடைக்காது”-சுப.வீரபாண்டியன்
”இது உ.பி, ம.பி அல்ல; ஆர்எஸ்எஸ் எதிர்பார்க்கும் ரத்தம் இங்கு கிடைக்காது”-சுப.வீரபாண்டியன்
Published on

அதிமுக மக்கள் பிரச்சனைகளுக்குப் போராடவில்லை என்றும் யார் தலைமைக்கு வருவது என்பதே அவர்களுக்குப் பெரிய பிரச்சனையாக உள்ளது என கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை தென்மேற்கு மாவட்டம், திமுக சார்பில் சென்னை மயிலாப்பூரில் முப்பெரும் விழா மற்றும் பொது மேடையில் பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலுரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், திமுக மகளிரணி செயலாளர் மற்றும் எம்.பியுமான கனிமொழி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கனிமொழி, ’ஒன்றிய அரசு இஸ்லாமியர்களுக்கு எதிராக சிஏஏ, விவசாயிகளுக்கு எதிராக வேளாண் சட்டம் கொண்டு வந்த போது எதிர்த்தது திமுக மட்டும்தான் என்றும் இதனை எதிர்த்துப் போராடாத அதிமுகவை திராவிட இயக்கமாக கருத முடியாது. அதிமுக மக்கள் பிரச்சனைகளுக்குப் போராடவில்லை என்றும் யார் தலைமைக்கு வருவது என்பதே அவர்களுக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது.

புதிய கல்வி கொள்கை மூலம் குல கல்வியை கொண்டு வருகிறது ஒன்றிய அரசு. நீட் தேர்வின் மூலம் மருத்துவக் கல்லூரிக்குச் செல்லாத நிலை உள்ளது. தற்போது அனைத்து கல்லூரிகளுக்கும் நுழைவுத்தேர்வு கொண்டு வர முயல்கிறது என்றும் இதனை எதிர்ப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பள்ளி மாணவர்களுக்குச் சிறப்பான காலை உணவு வழங்கும் திட்டத்தை தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். காலநிலை மாற்றத்தை இந்தியாவிலே சிந்திக்கும் ஆட்சியாக திமுக ஆட்சியாக உள்ளது. காலம் தாண்டி மக்களுக்கு தேவையான எதிர்காலத்தை பற்றிய மக்களின் அனைத்து தேவைகளைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் ஆட்சி, முத்தமிழறிஞர் கலைஞரிம் ஆட்சியின் நீட்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி உள்ளது ’’ என கனிமொழி பேசினார்.

அதனை தொடர்ந்து பேசிய சுப.வீரபாண்டியன், ‘ ’திமுக ஆட்சி - அதிமுக காட்சி என விளக்கமளித்தார். தமிழில் எப்போது ஒரு பொருளுக்கு முன் அ என்ற எழுத்தைச் சேர்த்தால் அது எதிர் பொருளைத்தான் தரும். அதுபோல திமுகவிற்கு எதிர் பொருள் அதிமுக அவ்வளவுதான் என்று கருணாநிதி கூறுவார். திமுக ஆட்சி 5 அடி முன்னேற்றினால் அதிமுக 10 அடி பின்னோக்கிக் கொண்டு செல்லும். கடந்த 10 ஆண்டு ஆட்சியில் எந்தவித வளர்ச்சியும் ஏற்படவில்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் எழுப்பப்பட்ட தீண்டாமை சுவர் திமுக ஆட்சியில் இடிக்கப்பட்டது. இதுதான் திமுக ஆட்சிக்கும் அதிமுக ஆட்சிக்கும் இடையே உள்ள விதியாசம்” என விளக்கமளித்தார்.

அதனை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கான காரணம் என்ன என பொதுமக்கள் ஒருவர் கேள்வியெழுப்புதற்குப் பதிலளித்த அவர், ’ மதம் என்ற பெயரால் மக்களை பிளவு படுத்தும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ் ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் ஏதேனும் நிகழ்வை நடத்தி கலவரத்தை ஏற்படுத்தி திமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ் நோக்கம் என குற்றஞ்சாட்டினார். ஆர்.எஸ்.எஸ் எதிர்பார்க்கும் ரத்தம் மத்தியப் பிரதேசத்தில், உத்தரப்பிரதேசத்தில் கிடைக்கும் தமிழகத்தில் தலைகீழாக நின்றாலும் அதற்கான வாய்ப்பு கிடைக்காது’ என சுப.வீரபாண்டியன் பதிலளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com