புழல் ஏரியிலிருந்து சென்னைக்கு வழங்கப்படும் குடிநீர் நிறுத்தம்?

புழல் ஏரியிலிருந்து சென்னைக்கு வழங்கப்படும் குடிநீர் நிறுத்தம்?
புழல் ஏரியிலிருந்து சென்னைக்கு வழங்கப்படும் குடிநீர் நிறுத்தம்?
Published on

சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரி இன்னும் இரு வாரங்களில் வறண்ட நிலைக்கு செல்ல உள்ளது. 

வடகிழக்குப் பருவமழை பொய்த்துபோனதால் சென்னையில் எதிர்பார்த்த அளவிற்கு மழை இல்லை. சென்னை குடிநீருக்கு ஆதாரமான ஏரிகள் எல்லாம் காய்ந்து மேய்ச்சல் நிலங்களாக மாறிவிட்டன. ஃபோனி புயலால் மழை பெய்து தண்ணீர் பிரச்னையிலிருந்து சென்னை தப்பிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் ஏமாற்றியது. 

மேலும் நிலத்தடி நீர்மட்டம் அடிபாதாளத்துக்கு சென்றுவிட்டது. தற்போது சென்னையே தண்ணீர் பஞ்சத்தில் சிக்கியுள்ளது. குறைந்தது ஜூலை வரையாவது கோடை நிலவும் என்பதால், சமாளிப்பது எப்படி என நினைத்து சென்னை மக்கள் விழி பிதுங்குகின்றனர்.

இந்நிலையில் சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரி இன்னும் இரு வாரங்களில் வறட்சி ஏற்படுட்டு, சென்னைக்கு குடிநீர் நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் முழுவதுமாக வறண்ட நிலையில், தற்போதைய சென்னையின் ஒரே ஆதாரமாக பார்க்கப்படுவது புழல் ஏரி மட்டும்தான். அதுவும் தற்போது வறண்டு 45 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.


புழல் ஏரியிலிருந்து மின் மோட்டார் மூலம் ராட்சத குழாய்கள் வழியாக விநாடிக்கு 25 கன அடி என்ற விகிதத்தில், நாளொன்றுக்கு 75 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே சென்னைக்கு வழங்கப்படுகிறது. சென்னையில் நாளொன்றுக்கு 800 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில், இன்னும் இரு வாரங்களில் புழல் ஏரி முழுமையான வறட்சியை எட்டும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

இதனால் ராட்சத குழாய்கள் மூலம் சென்னைக்கு அனுப்பப்படும் தண்ணீரும் நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதால், அடுத்தக்கட்டமாக சென்னையின் குடிநீர் தேவையை அதிகாரிகள் எப்படி சமாளிக்கப்போகிறார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com