சென்னை மழை பாதிப்பு குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பாக சில தினங்களுக்கு முன்பு புதிய கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் தாங்கள் தங்கியுள்ள இடங்களின் அருகாமையிலோ அல்லது சுற்றுப்புறங்களிலோ மழை நீர் தேங்கி நின்றாலும், குப்பைகள் அதிகமாக இருந்தாலும் 24 மணி நேரமும் சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
அதன்படி 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். அதுமட்டுமின்றி, 044-2536 7823, 044-2538 4965 / 044-2538 3694 என்ற எண்ணிலும் புகார் கூறலாம். இதுதவிர 94454 77205 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.