ஊரடங்கில் ஊரைச் சுற்றியவர்களை திருமண மண்டபத்தில் தங்க வைத்த போலீஸார் !

ஊரடங்கில் ஊரைச் சுற்றியவர்களை திருமண மண்டபத்தில் தங்க வைத்த போலீஸார் !
ஊரடங்கில் ஊரைச் சுற்றியவர்களை திருமண மண்டபத்தில் தங்க வைத்த போலீஸார் !
Published on

முழு ஊரடங்கை மீறி சாலைகளில் சுற்றியவர்களை பிடித்த திருவொற்றியூர் போலீசார், அவர்களை திருமண மண்டபத்தில் அடைத்து 2 மணி நேர கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினர். வழக்குப்பதிவு செய்த பிறகே அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

சென்னையில் கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மக்கள் முழுமையாக கடைபிடிக்க சென்னை காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. தேவையின்றி வாகனங்களில் சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல், ஊரடங்கை மீறியது தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

அது தொடர்பாக சென்னை திருவொற்றியூர் பகுதியில் காவல்துறை உதவி ஆணையாளர் ஆனந்தகுமார், திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் தவமணி நெருக்கடி மிகுந்த திருவொற்றியூர் பகுதியின் தெருக்களுக்கு சென்று ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு தொடர்பாகவும் முழு ஊரடங்கு அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் முழு ஊரடங்கு நேரத்தில் தேவையின்றி வெளியில் சுற்றித்திரிந்தவர்களையும் திருவொற்றியூர் போலீசார் பிடித்து வாகனங்களை பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது விதிமீறல் தொடர்பாக வழக்குபதிவு செய்தனர்.

மேலும் அவ்வாறு சுற்றித்திரிந்த 29 பேரை போலீசார் பிடித்து காவல்துறை வாகனத்தில் ஏற்றி திருவொற்றியூர் மேற்கு மாடவீதியில் உள்ள திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்று அடைத்தனர். சுமார் 2 மணி நேரம் அங்கு தங்க வைத்து கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் முழு ஊரடரங்கு அவசியம் குறித்தும் விழிப்புணர்வை திருவொற்றியூர் காவல் துறையினர் ஏற்படுத்தினர். அதன் பிறகே வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com