சென்னை: காசிமேட்டில் மீன்களை வாங்கக் குவிந்த மக்கள்

சென்னை: காசிமேட்டில் மீன்களை வாங்கக் குவிந்த மக்கள்
சென்னை: காசிமேட்டில் மீன்களை வாங்கக் குவிந்த மக்கள்
Published on

சென்னை காசிமேட்டில் மீன்களை வாங்க பொதுமக்களும், வியாபாரிகளும் குவிந்தனர்.

புரட்டாசி மாதம் முடிவடையவுள்ளதால், சென்னை காசிமேடு மீன் சந்தையில் ஏராளமானோர் மீன்களை வாங்க அதிகாலையிலேயே திரண்டனர். டீசல் விலை உயர்வால் குறைந்த எண்ணிக்கையிலான விசைப்படகுகளே, கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வதால் மீன் வரத்து குறைந்தே இருந்தது. இதன் காரணமாக மீன்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. காசிமேடு மீன் சந்தையில் ஒரு கிலோ சங்கரா மீன் 250ரூபாய்க்கும், வஞ்சிரம் 600ரூபாய்க்கும் விற்பனையாகின. இதே போல, ஒரு கிலோ பாறை மீன், 250ரூபாய்க்கும், நண்டு ஒரு கிலோ 300ரூபாய்க்கும் விற்பனையாகின.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com