கொரோனா வார்டில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள சானிடோரியம் நெஞ்சகநோய் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கட்டடத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் கொரோனா நோயாளிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
ஒரு அறையில் 34 நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். அவர்களுக்கு ஒரே கழிவறை மட்டுமே உள்ளதாகவும், அதுவும் பராமரிப்பு இல்லாமல் கதவுகள் உடைந்திருப்பதாகவும், அங்கே பாம்புகள் வருவதாகவும், குடிப்பதற்கு தண்ணீரும் முறையாக வழங்கவதில்லை என புகார் தெரிவித்தனர்.
அதேபோல் வெளியில் பன்றிகள் மேய்ந்துக் கொண்டிருக்கின்றன, நோய்த்தொற்று வேகமாக பரவிவரும் சூழலில் சிகிச்சை அளிக்கும் இடத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க கொரோனா நோயாளிகள் கோரிக்கை வைக்கின்றனர்.